கரூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைப்பேன்..?: காங்., வேட்பாளர் ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சி‌யர் எச்சரிக்கும் பரபரப்பு ஆடியோ

கரூர் : கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.


கரூர் : கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை நேரில் மிரட்டியதாக காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். அதன்படி, காங்கிரஸ்‌ நிர்வாகிகள் உள்‌ப‌ட 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியரும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் இதுதொடர்பாக செல்போனில் பேசும் உரையாடல் வெளியாகியுள்ளது. அதில், கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ‌பரிந்துரை செய்வேன் என மாவட்ட ஆட்சியர் கூறுவதும், அதற்கு ஜோதிமணி எதிர்ப்பு தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.

உரையாடலில் வேட்பாளர் ஜோதிமணி பேசியதாவது:- 10 பேர் புகா‌ர் அளிக்க வந்தால் அனு‌மதியின்றி கூடியதாக ஆகுமா..?. வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது நடவடிக்கையா..?.

ஆட்சியர் அன்பழ‌ன் : மிரட்டல் விடுத்த அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளேன். கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன்.

ஜோதிமணி: தேர்தல் நடத்தும் ‌அதிகாரி தேர்தலை ரத்து செய்வது குறித்து பேசலாமா..?.

ஆட்சியர் அன்பழகன்: உங்கள் தரப்பினர் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.

ஜோதிமணி : சுமார் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் தரப்பினர் பரப்புரையில் ஈடுபட்டோம். ஆனால் தேர்தல் ரத்து செய்வது குறித்து கூறுவது ‌ஏன்..?. இவ்வாறாக அந்த ஆடியோவில் உரையாடல் தொடர்கிறது.

தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன் என மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...