கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள ஸ்டேட் பாங்கிற்க்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி விட்டு, அங்கேயே அலட்சியமாக அதனை விட்டுச் செல்வதால், சமூக விரோத கும்பல் மூலம் ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் ஸ்டேட் பாங்கிற்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுப்பதற்காக வருபவர்கள் ஏ.டி.எம். கார்டை உள்ளே செலுத்திவிட்டு மீண்டும் கார்டை எடுக்காமல் மறந்து விடுகின்றனர். இப்படி தினமும் பத்துக்கும் மேற்பட்டோர் கார்டுகளை எடுக்காமல் மறந்து செல்வதும், பின்னர் மீண்டும் வந்து எடுத்துச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

அதேபோல, வெளியூரிலிருந்து வந்து பயன்படுத்தும் பயனாளிகள் ஏ.டி.எம். கார்டை மறந்து வைத்ததுடன், மீண்டும் கார்டுகளை எடுக்க வருவதில்லை. இப்படி தொடரும் அலட்சியத்தால் பல வங்கியின் ஏ.டி.எம். கார்டுகள் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்தில் குவிந்துள்ளது.
ஏ.டி.எம். கார்டுகளை கொண்டு கொள்ளையடிக்கும் நவீன கும்பல்கள் சுற்றித்திரியும் இந்த சமூகத்தில், பொதுமக்கள் இப்படி அலட்சியமாக ஏ.டி.எம். கார்டுகளை மறந்து விட்டு செல்வது ஆபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவிக்கின்றனர்.