நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு தினமே உள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று மாலை உடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்துள்ளது. இந்த சூழலில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி குறிஞ்சி நகரில் தூத்துக்குடியில் உள்ள தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் இறங்கியுள்ளது. கனிமொழி வீட்டின் மேல் தளத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வருமான வரித்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன்பேரில், கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
கனிமொழியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து உள்ளே நுழைய, வெளியே செல்ல வருமான வரித்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால், தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சோதனையில் எந்த ஆவணங்களும், ரொக்கமும் கிடைக்காததால், தங்களுக்கு தவறான தகவல் வந்ததாகக் கூறிவிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.