கோவை : சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிரான்ஸ் திரைப்பட விழாவில் 3 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கோவை : சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு பிரான்ஸ் திரைப்பட விழாவில் 3 விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கதிர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. சாதிய பாகுபாடுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. மேலும், இத்திரைப்படம், உலக திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வந்தது. இந்த நிலையில், பிரான்ஸ் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு, இன்டிபென்டட் ஃபிலிம் விருது, ஜுரி விருது மற்றும் ஆடியன்ஸ் விருது ஆகிய 3 விருதுகளை பெற்றது.

சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வரும் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.