நீலகிரி : நீலகிரி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் வாகனப் பேரணி நடத்தப்பட்டது.
நீலகிரி : நீலகிரி தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் வாகனப் பேரணி நடத்தப்பட்டது.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையொட்டி, இன்று காலை முதல் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீலகிரி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் வகையில், கூட்டணி கட்சி தொண்டர்களுடன் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர். மேட்டுப்பாளையம் நகர பகுதி முழுவதும் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.