நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில், வரும் 18ம் தேதி விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், விடுப்பு தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில், வரும் 18ம் தேதி விடுப்பு அளிக்க வேண்டும் என்றும், விடுப்பு தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:- வரும் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை பொது தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, அன்றைய தினம் செலாவணி முறி சட்டம் 1881 பிரிவு 25ன் கீழ் அனைத்து கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது, தனியார்த்துறை நிறுவனங்கள் மற்றும் அனைத்து இதர நிறுவனங்களிலும் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அனைத்து நிறுவனங்களும் தமது தொழிலாளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு, அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், இதுதொடர்பாக 1951ம் ஆண்டு பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பின்படி நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர்துறை அலுவலர்களை கொண்ட கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. விடுப்பு தொடர்பாக புகார்கள் ஏதேனும் இருந்தால் தொழிலாளர்துறை உதவி ஆணையர் கோபாலகிருஷ்ண் - 9444116563, குன்னூர், கோத்தகிரி தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராணி லட்சுமிபாய் - 9489361802, கூடலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பத்மாவதி - 9952833541, ஊட்டி தொழிலாளர் உதவி ஆய்வாளர் வசந்தா - 9655272220 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு உதவி ஆணையர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.