நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி ஆய்வு

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் ரேணுஜெய்பால் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் ரேணுஜெய்பால் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வாய்வின் போது, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், உதவி ஆட்சியர்(பயிற்சி) சினேகா, உதவி தேர்தல் அலுவலர் டெய்சிகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜயதுரை, உதவி இயக்குநர் (நில அளவை) தவமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 



பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி தெரிவித்ததாவது:- 

நாடாளுமன்றத் தேர்தலின் போது கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கோயமுத்தூர் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யும் பொழுது யாருக்கு, எந்த சின்னத்திற்கு வாக்குப் பதிவு செய்துள்ளோம் என்பதை 7 வினாடிகள்; அறிந்து கொள்ளும் விதமாக புதிய தொழில்நுட்பம் இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இத்தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்புக் கேமரா கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் காவல்துறை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது தொடர்பாக அலுவலர்களிடம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, அவர் தெரிவித்தார்

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...