நீலகிரி : உதகை ரோஜா பூங்கா செல்லும் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது போலீசார் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாதவாறு தடுப்புகளை வைத்துள்ளனர்.

கோடை சீசன் தொடங்கிய நிலையில், உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, விஜயநகரம் பகுதியில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவிற்கு ஏராளமானோர் செல்கின்றனர். சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையில் அலங்கார் சந்திப்பில் இருந்து பூங்கா நுழைவு வாயில் வரை சாலையோரங்களில் இரு புறங்களிலும் சிலர் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இதில், ரோஜா பூங்கா சாலையோரங்களில் கடைகள் வைத்துள்ளவர்கள் கார்கள் மட்டுமின்றி, வேன், லாரி போன்றவைகளும் நிறுத்திக் கொள்கின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, அலங்கார் சந்திப்பு முதல் பூங்கா நுழைவு வாயில் வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.