கோவை : செல்வபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : செல்வபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு தி.மு.க.வினர் பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர், வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வபுரம் பகுதியில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து வருவதாக எழுந்த புகாரை அடுத்து அ.தி.மு.க.வினர் அந்தப் பகுதியில் குவிந்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் காவல் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, வருமான வரித்துறையினர் செல்வபுரம் பகுதியில் தீபம் ஸ்கேன் என்கின்ற கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் தேர்தல் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல, அந்த அலுவலகத்தில் உள்ள கணினிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பணம் கொடுத்த தி.மு.க.வினர் இரண்டு பேரை செல்வபுரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.