நடைபெற இருக்கும் தேர்தல் காவலாளிக்கும் களவானிகளுக்கும் இடையேயானது : மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் பேச்சு

கோவை : நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் காவலாளிக்குன், களவானிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.


கோவை : நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் காவலாளிக்குன், களவானிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.



நீலகிரி மக்களைவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இல. கணேசன் மேட்டுப்பாளையத்தில் உள்ள காரமடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க.. ஆனால், அதே கட்சியுடன் கூட்டணி வைத்து வாக்கு கேட்கிறது. தி.மு.கவில் கணக்குகள் சரியில்லை என எம்.ஜி.ஆரால் உருவாக்கபட்ட கட்சி அ.தி.மு.க கடந்த தேர்தலில் தனியாக நின்று தமிழகத்தில் 37 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது அ.தி.மு.க, மீதமுள்ள இரண்டு தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.கவும், பட்டாளி மக்கள் கட்சியும் தற்போது அ.தி.மு.கவுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. எனவே, நாங்கள் ஜெயிப்பது உறுதி. ஆனால், கலைஞருக்கு பின் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும் தி.மு.க.வுக்கு இந்த தேர்தலிலும் கிடைக்க போவதும் பூஜ்ஜியம் தான். பெரும்பான்மையோடு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும், கூட்டனியில் உள்ள அ.தி.மு.க சார்பில் வெற்றி பெறும் பலரும் மத்திய அமைச்சராக பதவிக்கு வர வாய்ப்புள்ளது. அப்போது, மத்தியில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களும் நியாயமாக கிடைக்கும். 



மேலும், தமிழகத்தில் நடைபெறும் 40 நாடாளுமன்ற தொகுதி மட்டுமின்றி, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றி பெற்று, ஏற்கனவே மக்கள் அளித்த தீர்ப்பின்படி ஜந்து ஆண்டுகள் ஆட்சி செய்வது நிச்சயம். இத்தேர்தல் காவலாளிக்கும், களவானிகளுக்குமான தேர்தல். நாடு பாதுகாப்பாக இருக்கவும், வளர்ச்சி அடையவும் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராவது அவசிய . நாட்டின் பிரதமர் பற்றியும் தமிழக முதல்வர் பற்றியும் தரக்குறைவாகவும் கண்ணியம் இன்றியும் பேசி வருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இதனால் தான் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி இவரை தனது இறுதி காலம் வரை தி.மு.க தலைவராக ஏன் நியமிக்கவில்லை என புரிகிறது, என பேசினார். 

பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க.வை சேர்ந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ், மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...