கோவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் வாகனப் பேரணி நடத்தினர்.
கோவை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் வாகனப் பேரணி நடத்தினர்.

இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் பாப்பம்பட்டி பிரிவில் தொடங்கிய வாகனப் பேரணியை இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி மாரியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், இருகூர் ஒண்டிப்புதூர் சிங்காநல்லூர், ஹோப் காலேஜ் தண்ணீர்பந்தல், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ், புதுபாலம், சிவானந்த காலனி, சித்தாபுதூர், பழையூர் இறுதியாக புளிய குளத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு பேரணி முடிவடைந்தது.

இந்தப் பேரணியில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் வி. மாரியப்பன் மாநிலத் துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி மேலும் பல மாநில குழு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.