கோவை : கேரள மக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான விசு பண்டிகையயொட்டி, கோவைவாழ் மலையாள மக்கள் காலையிலேயே புத்தாடை அணிந்து சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினர்.
கோவை : கேரள மக்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான விசு பண்டிகையயொட்டி, கோவைவாழ் மலையாள மக்கள் காலையிலேயே புத்தாடை அணிந்து சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினர்.

கேரள மக்களின் புத்தாண்டு தினம் விசுக்கனி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து வகை பழங்களுடன் பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்து வீடுகளில் இறைவனுக்கு படைத்து, காலை எழுந்த உடன் அவற்றை கண்டால் பிறக்கின்ற ஆண்டு முழுவதும் செல்வ செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, இன்று விசு பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் அதிகாலை எழுந்து வீடுகளில் விசு கனியை கண்டு தரிசித்தனர். மேலும், மூத்தோர்களிடம் ஆசி பெற்று கைநீட்டம் பெற்றனர். இதை தொடர்ந்து, சித்தாபுதூர் பகுதியிலுள்ள அருள்மிகு ஐய்யப்பன் திருக்கோவிலில் ஏராளமான மலையாள மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.