நீலகிரி : கோத்தகிரி சாலையில் தனியாக உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி : கோத்தகிரி சாலையில் தனியாக உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள முக்கிய சாலைகளில் திடீரென ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை அவ்வப்போது விளை நிலங்களுக்கு அருகில் சென்று வருவதால், விவசாயிகள் தேயிலைத் தோட்டங்களில் இலை பறிக்க அச்சமடைகின்றனர். மேலும், இந்த யானை கோத்தகிரி அடர்ந்த வனப் பகுதிகளுக்கு பகல் நேரத்தில் சென்றாலும், இரவு நேரத்தில் முக்கிய சாலையில் வந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் இந்த ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.