கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி டி.ஆர்.எஸ்.எஸ்.ஏ., எஃப், ஆர்.எஸ்.ஐ., ஏ.எஸ்.எஸ்.ஏ. உள்ளிட்ட பல்வேறு கிளப்புகளின் சார்பில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

கோவை காஸ்மோபொலிடியன் கிளப்பில் தொடங்கிய இந்தப் பேரணி வ.ஊ.சி. ஸ்கேட்டிங் ரிங்க் அருகே நிறைவடைந்தது. இதில், 150-க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் பங்கேற்று 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.