ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றினைந்து பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் : கோவையில் பிரகாஷ் காரத்

கோவை : ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றினைந்து பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.


கோவை : ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றினைந்து பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.



தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜனை ஆதரித்து சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்று சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது:- இந்திய வரலாற்றில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பின்பற்ற கூடிய பா.ஜ.க. இந்திய அரசியல் சட்டத்தை ஒருபோதும் பின்பற்றுவதில்லை. இந்திய அரசியலமைப்பை கட்டமைத்த அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று, அந்த அரசியல் அமைப்பானது ஆபத்தில் உள்ளது. எனவே, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஒன்றினைந்து பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும்.



பா.ஜ.க.வின் ஆட்சியில், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே இந்திய அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என வெளிப்படையாக பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மனுசாஸ்திரத்தின் அடிப்படையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் இருந்து கூறிவருகிறது. அதைத்தான் மோடியின் பா.ஜ.க நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில், மதத்தின் பெயரால் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி, சிறுபான்மையினரையும் தலித் சமூகத்தினரையும் தாக்கியுள்ளனர். இதுவரை பசு பாதுகாப்பு என்ற பெயரில் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க.வினருக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால், மக்கள் மத்தியில் பாதுகாப்பில்லாத உணர்வை ஏற்படுத்தி, தங்களால் தான் பாதுகாப்பு வழங்க முடியும் என்ற பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று வாக்குறுதி அளித்த பா.ஜ.க.வின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. கோவையில் 1,000-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கான வேலைகள் பறிபோனது. அதற்கு காரணம் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி வரி விதிப்பும் தான். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்காததால் தற்கொலை செய்தனர். ஒரு விவசாயியின் குடும்பத்திற்கு வருடம் ஆறாயிரம் ரூபாய் அளிக்கப்போவதாக கூறுவது பா.ஜ.க.வின் தோல்வியை காட்டியுள்ளது. ரபேல் விவகாரத்தில், மோடி நேரடியாக தலையிட்டு அனுபவமில்லாத அனில் அம்பானி நிறுவனத்திடம் ரூ. 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் ஒப்பந்தத்தை வழங்கி ஊழல் செய்துள்ளார்.



மதக் கலவரங்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்துவதிலும், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத திணிப்பிலும், ஒரே மதம், ஒரே அரசு என்ற வகையில் பாசிச ஆட்சியை உருவாக்க பா.ஜ.க முயல்கிறது. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசு உரிமைகளுக்காக எதிர்த்து நிற்காமல், பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டது. எனவே, இவர்களை ஆட்சியிலிருந்து அகற்றவும், கோவையை அமைதியான நகரமாக உருவாக்கவும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினருக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்,என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியின், முஸ்லிம் லீக், ம.ம.க., ம.ஜ.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...