கோவை : மருதமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெள்ளிங்கிரி மலை வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கோவை : மருதமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வெள்ளிங்கிரி மலை வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் நேற்று மதியம் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை இன்று அதிகாலை வனத்துறையினர் போராடி அணைத்தனர். இந்த நிலையில்,போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளிங்கிரி மலையின் 6-வது மலையில் இன்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் மளமளவென பிற பகுதிகளுக்கும் பற்றி எறிந்த இந்த தீயை வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வர போராடினர்.
மருதமலை வனப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி அணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.