கோவை மாவட்டத்தில் சிறப்பு முகாம் மூலம் புதியதாக 43,153 வாக்காளர் சேர்ப்பு : 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்

கோவை : மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும், கோவை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை : மக்களவை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும், கோவை மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18 -ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவை தொகுதிகள் உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3,070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 38 ஆயிரத்து 442 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 66 ஆயிரத்து 331 பெண் வாக்காளர்களும், 341 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 29 லட்சத்து 05 ஆயிரத்து 114 வாக்காளர்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 153 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புதியதாக சேர்க்கப்பட்டுள்ள 43 ஆயிரத்து 153 வாக்காளர்களையும் சேர்த்து சுமார் 69 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் 69 ஆயிரம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், எத்தனை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்கிற விபரம் இல்லை. வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க பெறாதவர்கள் தங்களுக்கு கிடைக்க பெற்றுள்ள பூத்சிலிப்புடன் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, பான்கார்டு, ஒட்டுநர் உரிமம், வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ள கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்,’’ என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...