நீலகிரி : குன்னூர் அருகே சாலைபணி நடைபெறுவதால் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : குன்னூர் அருகே சாலைபணி நடைபெறுவதால் லேம்ஸ்ராக் காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக, சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா டால்பின் முஸ்லிம் ராக் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு வந்து செல்பவர்களுக்கு சாலை வசதியை மேம்படுத்தும் பொருட்டு, தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தலமான லேம்ஸ் ராக் செல்லும் சாலை அடைக்கப்பட்டு, அங்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு நாளில் இப்பணிகள் முடிவுற்ற பின் வழக்கம் போல், சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம் என சுற்றுலாத் துறையினர் கூறியுள்ளனர். இதேவேளையில், டால்பினோஸ் காட்சி முனைக்கு இப்பகுதி வழியாக செல்பவர்கள் எந்தவித தடையும் இன்றி சென்று வரலாம் என்று சுற்றுலா அதிகாரிகள் கூறுயுள்ளனர்.