மத்தியில் பா.ஜ.க.வையும், மாநிலத்தில் அ.தி.மு.க.வையும் தமிழக மக்கள் அகற்றவேண்டும் : கோவையில் டி. ராஜா வேண்டுகோள்

கோவை : மத்தியில் பா.ஜ.க.வையும், மாநிலத்தில் அ.தி.மு.க.வையும் தமிழக மக்கள் அகற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா வேண்டுகோள் விடுத்தார்.


கோவை : மத்தியில் பா.ஜ.க.வையும், மாநிலத்தில் அ.தி.மு.க.வையும் தமிழக மக்கள் அகற்றவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜனை ஆதரித்து பாப்பநாயக்கன்புதூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது :-நாம் பெற்ற சுதந்திரம் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஜனநாயகம் இருக்குமா இல்லை அழிந்துபோகுமா என்ற அச்சம் நாடு முழுவதும் உள்ளது. இதற்கு காரணம் பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியாக இருந்தாலும், அதனை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் இயக்கம். இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதில்லை. மக்களை மதத்தின் பெயரால் மோத வைப்பது, மத அரசியல் செய்வதே அவர்களின் கொள்கை. இவர்களால் பாசிச ஆட்சியைதான் அமைக்க முடியும். சனாதன கொள்கைகள், மனுசாஸ்திரம் அடிப்படையில் நம் சட்டங்களை மாற்றுவதற்காக மோடி ஆட்சியில் உள்ளார் என்று பா.ஜ.க. அமைச்சர்கள் பேசியுள்ளனர். இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு, அனைவருக்கும் அரசியல் நீதி, சமூக நீதி, பொருளாதர நீதி, சம உரிமை, கல்வி மற்றும் மருத்துவ உரிமைகள் ஆகியவை அம்பேத்கர் தந்த அரசியல் சட்டத்தில் உள்ளது. இதனை தகர்க்க வேண்டும் என்று பா.ஜ.க முயற்சிக்கிறது.

இந்து முஸ்லீம் மோதல் எனும் மிகுந்த சோதனையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. அந்த நேரம் மாகத்மா காந்தி மத மோதலை நிறுத்த போராடிக் கொண்டிருந்தார். அவரைக் கொன்றவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று வலியுறுத்தியவர் காந்தி. அவரின் கொள்கையை பா.ஜ.க ஏற்றுக் கொள்கிறதா..?. இந்தியா மதச்சார்புடைய நாடு என்றாகிவிட்டால், அதைவிட பேரழிவு வேறு எதுவுமில்லை என்றார் அம்பேத்கர். எல்லோருக்குமான அரசாக, ஜனநாய குடியரசாக, மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்றார். அதை தகர்க்க ஆர்.எஸ்.எஸின் பா.ஜ.க. முயல்கிறது.ஒரு நாடு ஒரு கலாச்சாரம் என்று இந்து கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். எதை உண்ண வேண்டும், உடுத்த வேண்டும், லவ் ஜிஹாத் இவற்றை வைத்து கலவரங்கள் செய்து வருகின்றனர்.

கும்பல் படுகொலைகளில் தாக்கப்பட்டவர்கள் தலித்துகளும், முஸ்லீம்களும், கிறித்தவர்களும், பெண்களும் தான். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா உருவாகியுள்ளது, ஜனநாயக உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. மாணவர்கள், படைப்பாளிகள் என மோடியையும் அவரது அரசியல் கொள்கைகளையும் விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்திய வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் செல்வந்தர்கள் தான் இந்த ஐந்து ஆண்டுகளில் பயன்பெற்றுள்ளனர். வன்முறையை கட்டவிழ்த்துவிடும் ஆர்.எஸ்.எஸ் ற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமேயில்லை. அரசு பொது நிறுவனங்கள் மூடப்படுகிறது. நேருவின் ஐந்தாண்டு திட்டங்கள் தான் இந்தியாவை உருவாக்கியது, அதை கலைத்துவிட்டு நிதி ஆயோக் என்ற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ரபேல் விமான விவகாரத்தில், ஹெச்.ஏ.எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனத்தை ஒதுக்கிவிட்டு, அனில் அம்பானியின் தொடங்கப்படாத நிறுவனத்திற்கு பேரத்தை வழங்கியுள்ளார் மோடி. தற்போது, நீதிமன்றம் இவற்றை விசாரிக்க துவங்கியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவை, திருப்பூரில் உள்ள ஏராளமான சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பொருளாதரம் நெருக்கடியில் உள்ளது. இவற்றுக்கான காரணம் மோடியின் ஆட்சி. அவர் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆட்சியை நடத்தி வருகிறார். எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றி இந்தியாவை காப்பாற்ற, மத்தியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும். தமிழக மக்கள் மத்தியில் பா.ஜ.க.வை அகற்றுவதோடு, எடப்பாடியை தோற்கடித்து தமிழ்நாட்டை காக்கவேண்டும். இப்போது அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் கொள்கைகளை கூட பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றனர். அதிகாரத்தில் தொங்கி கொள்வதற்காக மோடியின் காலடியில் விழுந்துகிடக்கும் எடப்பாடியின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைவது உறுதி. மத்தியில் பா.ஜ.க.வையும், மாநிலத்தில் அ.தி.மு.க.வையும் தமிழக மக்கள் அகற்றவேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.



இக்கூட்டத்தில் தி.மு.க. மாநகர் மாவட்ட பொறுப்பு செயலாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியின், முஸ்லிம் லீக், ம.ம.க., ம.ஜ.க., ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...