கோவை : மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயை நீண்ட போராட்டத்திற்கு வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை : மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயை நீண்ட போராட்டத்திற்கு வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே நேற்று மதியம் திடீரென காட்டுத்தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனப்பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதைத் தொடர்ந்து, தடாகம் வனப்பகுதிக்கும் காட்டுத் தீ பரவியது. தொடர்ந்து, தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த வனத்துறையினர், இன்று அதிகாலை 1.40 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த வாரத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இரு மாபெரும் காட்டுத் தீ ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல, மருதமலை காட்டுத்தீயானது, கோவை வனப்பகுதியில் அடுத்தடுத்து ஏற்படும் 4-வது காட்டுத்தீயாகும்.