கோவை கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட சிகிச்சை பிரிவிற்கு 5 விருதுகள்

கோவை : கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஸ்பைன் சொசைட்டி ஆண்டு மாநாட்டில் கோவை கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட சிகிச்சை பிரிவிற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது.


கோவை : கொரியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஸ்பைன் சொசைட்டி ஆண்டு மாநாட்டில் கோவை கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட சிகிச்சை பிரிவிற்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது. 

கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய பசிபிக் ஸ்பைன் சொசைட்டி ஆண்டு மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த 600 அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி அறிக்கைகளின் அடிப்படையில் சிறந்த மருத்துவக் குழு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அதில், கோவையைச் சேர்ந்த கங்கா மருத்துவமனையின் சார்பில் மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. பின்னர், அறிக்கையில் இடம்பெற்றுள்ளபடி, மிகவும் கடினமான சிகிச்சை முறைகள் குறித்து கங்கா மருத்துவக் குழு விளக்கிக் கூறியது. 

இதைத் தொடர்ந்து, ஆசிய ஸ்பைன் ஜார்னலின் சிறந்த பேப்பர் அவார்டு உள்பட 5 முக்கிய விருதுகளை கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட சிகிச்சை பிரிவிற்கு வழங்கப்பட்டது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கங்கா மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி அறிக்கையை, மருத்துவர்கள் எஸ். ராஜசேகரன், அஜோய் பிரசாத் ஷெட்டி, ரிஷி முகேஷ் கண்ணா மற்றும் திலீப் சந்த் ராஜா ஆகியோர் அடங்கிய குழு தயாரித்தது. இந்த அறிக்கையை ஆசிய பசிபிக் ஸ்பைன் சொசைட்டி மாநாட்டில் மருத்துவர் திலீப் வழங்கினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...