கோவை : சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, தனது 50 ஆண்டுகால பொதுவாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, தனது 50 ஆண்டுகால பொதுவாழ்விற்கு கிடைத்த அங்கீகாரம் என முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கோவை பீளமேட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பொங்கலூர் பழனிசாமி பேசியதாவது :- சூலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தனது 50 ஆண்டு கால பொதுவாழ்விற்காக கிடைத்த அங்கீகாரம். தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுவதை பெருமையாகக் கருதுகிறேன்.
3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளேன். செம்மொழி மாநாட்டின் போது கோவை நகர வளர்ச்சிக்காக திட்டங்களை செயல்படுத்தினேன். சூலூர் தொகுதியில் விசைத்தறி மற்றும் விவசாய தொழில்கள் மேம்பாட்டிற்காகப் பாடுபடுவேன். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சிப்பேன். ஜி.எஸ்.டி.யினால் விசைத்தறி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. வரியினை குறைக்க தி.மு.க., காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
கோவை - சூலூர் இடையே ஆறு வழிச்சாலை அமைப்போம். ஒருமாத காலத்தில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு, சூலூர் தொகுதியில் பரப்புரையை மேற்கொள்வோம், என அவர் தெரிவித்தார்.