வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி வகுப்புகளை ஆய்வு செய்த கோவை ஆட்சியர்

கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 



கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள பயிற்சி அளிக்கும் மையமான கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பயிற்சி மையத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் டெய்ஸிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :- கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளில் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்று வருகின்றது.

கோவை மாவட்டத்தில் 3,070 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில், தேர்தல் பணிமேற்கொள்ள ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசுப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படும் வகையில், 14,746 நபர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24-ம் தேதியும், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 7-ம் தேதியும் நடைபெற்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் உதவி தேர்தல் அலுவலர் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு, அவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்தலை பொறுத்தவரையில் நியாயமாகவும், முறையாகவும் நடைபெற தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் ஒவ்வொரு பணிகளுக்குமான கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நடமாடும் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் நிலையான மேற்பார்வை பறக்கும்படை அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், எனக் கூறினார். 

முன்னதாக, கோவை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசினர் பொறியியல் கல்லூரியில், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, ஆகியவற்றிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்ட தேர்தல் அலுவலருமான கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...