இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் : கோவையில் திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் பேட்டி

கோவை : இடதுசாரிகள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்தார்.


கோவை : இடதுசாரிகள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் தெரிவித்தார்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- காம்ரேட் டாக்கீஸ் என்ற பெயரில் யூ-டியூப் சேனல் மூலமாக கலைதளமாக செயல்படுகின்றோம். சினிமாவில் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது என்பதால், அறம் சார்ந்த அரசியலை பேசுவதற்காக இந்த சேனலை தொடங்கி செயல்படுகின்றோம். இசை கலைஞர், நாடகக் கலைஞர், நடிகர்களை ஒன்றிணைத்து இதை தொடங்கி இருக்கின்றோம். 

துணிந்து சொல் என்ற பெயரில் பிரச்சாரப் பாடலையும், காவல்காரன் என்ற பெயரில் குறும்படமும் இப்போது வெளியிடுகின்றோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இவற்றை வெளியிடுகின்றோம். இன்று வெளியிடும் இந்த பாடலை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் ஜிக்னேஷ் மேவானி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் வெளியிட இருக்கின்றனர். 

சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 4 தொகுதிகளிலும் நேரடியாக பிரச்சாரம் மேற்கொள்கின்றோம். இடதுசாரி வேட்பாளர்கள் அறம் சார்ந்து செயல்படக் கூடியவர்கள். ஒரு வேட்பாளர் 50 வேட்பாளர்களுக்கு சமம். மேலும், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம். இந்த 5 தொகுதிகளில் நேரடியாக பிரச்சாரத்தினை தொடங்கி இருக்கிறோம். உதயசூரியன் சின்னத்தை ஆதரிப்பதில் பிரச்சினை இருக்கின்றது. அதனால், உதயசூரியன் சின்னத்தினை ஆதரிக்கவில்லை. 

விடுதலை சிறுத்தை வேட்பாளர் ரவிக்குமார் மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை எப்போதும் உண்டு. இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்வதால், எதிர்வினைகள் நடக்கும் என தெரியும். அதை தாண்டி தங்களின் குரலை ஒலிப்பதுதான் கலைஞர்களின் வேலை. நான் இடதுசாரி இயக்கத்தை முன்நிறுத்துபவன் என்பதால், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்க விரும்பவில்லை. அதன் ஆழமான அரசியலையும் பேச விரும்பவில்லை, என இயக்குனர் ராஜூ முருகன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...