ஜி.எஸ்.டி வரியால் பாதிப்பு என சில அமைப்புகள் தவறான தகவல்களை பரப்புகின்றன : டாப்மா தலைவர் கல்யாண சுந்தரம் கருத்து

கோவை : ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொழில்முனைவோருக்கு செலவையும், வரியையும் குறைக்க மிகுந்த உதவிகரமாக இருப்பதாகவும், ஜி.எஸ்.டி வரியால் பாதிப்பு என சில அமைப்புகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தமிழ்நாடு பம்ப்செட் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.


கோவை : ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொழில்முனைவோருக்கு செலவையும், வரியையும் குறைக்க மிகுந்த உதவிகரமாக இருப்பதாகவும், ஜி.எஸ்.டி வரியால் பாதிப்பு என சில அமைப்புகள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக தமிழ்நாடு பம்ப்செட் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு பம்ப்செட் உற்பத்தியாளர் சங்கம் (டாப்மா) தலைவர் கல்யாணசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- பம்ப் தொழிலில் 30 ஆண்டுகளாக இருக்கின்றோம். சிறு, குறு பம்ப் உற்பத்தியாளர்கள் 120 பேர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஜி.எஸ்.டி வரி விதிப்பு செலவையும், வரியையும் குறைக்க மிகுந்த உதவிகரமாக இருக்கின்றது. ஜி.எஸ்.டி. வரியால் பாதிப்பு என சில அமைப்புகள் தவறான தகவல்களை தெரிவிக்கின்றன. 

பழைய வரி முறைகளை விட இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் 4 சதவீதம் பம்ப் உற்பத்தியாளர்களுக்கு சாதகமான நிலை இருக்கின்றது. சி-பார்ம் முறை இல்லாததால் தொழில்முனைவோருக்கு அலைச்சல் மிச்சமாகின்றது. இ-வே பில் முறை இருப்பதால், சிறு,குறு தொழில் முனைவோருக்கு அலைச்சல், பணிசுமை குறைகின்றது. 50 ஆயிரம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டதாக அரசு எந்த புள்ளி விபரங்களை அடிப்படையில் சொல்கின்றது என தெரியவில்லை. பம்ப்செட் உற்பத்தி தொழிலில் தற்போதும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகின்றது. பெரும்பாலான தொழில்களில் ஆட்கள் தேவை அதிகம் இருக்கிறது. 

ஜி.எஸ்.டி குறித்து தவறான தகவல் பரப்பப்படுகின்றது. ஒரு சில பிரிஞ்ச் அமைப்பினர் இது போன்ற தகவல்களை பரப்புகின்றனர். எங்கள் உறுப்பினர்களுக்கு ஜி.எஸ்.டி. வரவிற்குப் பின்னர் 10 முதல் 20 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. நான் பா.ஜ.க. கட்சியில் இருப்பதற்கும், இந்த செய்தியாளர் சந்திப்பிற்கும் தொடர்பில்லை. பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜாப் ஆர்டருக்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பேன் என்ற வாக்குறுதியை வரவேற்கின்றோம். இந்த ஆண்டில் மட்டும் 10 பேர் உறுப்பினராக எங்கள் சங்கத்தினர் சேர்ந்துள்ளனர், எனக் கூறினார். 

அதே வேளையில், ஜி.எஸ்.டி. வந்த பின்னர் எத்தனை தொழிற்கூடங்கள் அதிகரித்துள்ளது, எத்தனை தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்துள்ளது, தொழிலாளர்கள் வேலை இழக்கவில்லை, தொழிற்கூடங்கள் மூடவில்லை என்றால், அதற்கு என்ன புள்ளி விபரங்கள் இருக்கின்றது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு தமிழ்நாடு பம்ப்செட் உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கல்யாண சுந்தரம் மழுப்பலான பதிலை அளித்தார். டாப்மா அமைப்பை நடத்தி வரும் கல்யாண சுந்தரம், பா.ஜ.க. வர்த்தக அணி மாநில செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...