Exclusive: கோவை மாவட்டத்தில் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்க முடிவு

கோவை : கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல மற்றும் அவர்களுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


கோவை : கோவை மாவட்டத்தில் மக்களவை தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்ல மற்றும் அவர்களுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 தேதி நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் 975 மையங்களில் 3070 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவு பதிவாக வேண்டும் என வாக்களிக்க தகுதியான அனைத்து தரப்பினரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் மிக தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஆயிரத்து 686 மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க எதுவாக 975 மையங்களுக்கு வீல்சேர்கள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் தன்னார்வலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இவர்களுக்கு அன்றைய தினம் ரூ 250 சம்பளமாக வழங்கப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...