நீலகிரி: நீலகிரியில் பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதாவை பெயர் சொல்லி கூறிவருவதாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. நிர்வாகியிடம் அம்மா என்று கூறும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
நீலகிரி: நீலகிரியில் பிரச்சாரத்தின் போது, ஜெயலலிதாவை பெயர் சொல்லி கூறிவருவதாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. நிர்வாகியிடம் அம்மா என்று கூறும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்ற தேர்தக் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அ.ம.மு.க.விற்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்தவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஜெயலலிதாவை பெயர் சொல்லி கூறிவருவதாகக் கூறி அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அ.ம.மு.க. நிர்வாகியிடம் அம்மா என்று கூறும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஜெயலலிதாவை அம்மா என்று சொல்லாமல் ஜெயலலிதா என்று தொடர்ந்து கூறி வந்ததால், இதனைக் கேட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அண்ணா சிலை அருகே வந்து அ.ம.மு.க.வைச் சேர்ந்த உள்ளூர் பேச்சாளருக்கு கண்டனம் தெரிவித்து முற்றுகையிட வந்தனர்.
இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், காவல் ஆய்வாளர் அம்மா துரை தலைமையிலான காவலர்கள் அங்கே குவிக்கப் பட்டனர். மேலும், அடைமொழிகள் குறித்தெல்லாம் வழக்குப் பதிவு செய்வது என்பது இயலாத காரியம் என்பதால், புகார் கொடுத்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் கூறினர். இதனைத் தொடர்ந்து, இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் புகார் கொடுக்காமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.