கோவை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு வரும் 13-ம் தேதி மறுபயிற்சி நடக்கிறது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 ஆகியோர்களுக்கு வரும் 13-ம் தேதி மறுபயிற்சி நடக்கிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் நிலை-1 வரும் 13-ம் தேதியன்று மறுபயிற்சி அளிக்கப்படவுள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் 2 மற்றும் 3 ஆகியோர் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
பயிற்சி மையங்களின் விபரம் பின்வருமாறு.
1. மேட்டுப்பாளையம்
நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேசனல் நகர், சிறுமுகை சாலை, மேட்டுப்பாளையம் 641301
2. சூலூர்
ஆர்.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருச்சி சாலை, சூலூர்
3. கவுண்டம்பாளையம்
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
உடையாம்பாளையம் சாலை, ஜி.என்.மில்ஸ்
(அஞ்சல்) கோவை 641029
4. கோவை (வடக்கு)
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, நவ இந்தியா, கோவை
5. தொண்டாமுத்தூர்
ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்
டெக்னாலாஜி,
சுகுணாபுரம், குனியமுத்தூர்,கோவை 641008
6. கோவை (தெற்கு)
நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, காமராஜ் சாலை, ரெட்ப Pல்ட்ஸ்,
கோவை 641018
7. சிங்காநல்லூர்
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
ராமநாதபுரம், கோவை 641045
8. கிணத்துக்கடவு
இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி,
ஒத்தக்கால்மண்டபம்,
கோவை 641 032
9. பொள்ளாச்சி
மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி,
நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு
ஆடிட்டோரியம், உடுமலை சாலை, பொள்ளாச்சி
10. வால்பாறை
மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி,
நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு
ஆடிட்டோரியம், உடுமலை சாலை, பொள்ளாச்சி, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.