ரபேல் ஊழல் விவகாரம் : செய்தியாளர்களைக் கண்டு பிரதமர் மோடி ஓடி ஒழிவதாக ஆ.ராசா விமர்சனம்

நீலகிரி : ரபேல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்காமல் பிரதமர் மோடி ஓடி ஓழிவதாக நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா விமர்சித்தார்.


நீலகிரி : ரபேல் ஊழல் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்காமல் பிரதமர் மோடி ஓடி ஓழிவதாக நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா விமர்சித்தார். 



நீலகிரி மக்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் அ. ராசா இன்று உதகையில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உதகை ஐந்து லாந்தர், மார்கெட், மெயின் பஜார், கமர்சியல் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். 



அப்போது அவர் பேசியதாவது :- என் மீது 2ஜி ஊழல் வழக்கு இருந்தபோது, நான் செய்தியாளர்களை சந்தித்து, அதற்கான விளக்கங்களை அளித்தேன். தற்போது, பிரதமர் மீது ரபேல் ஊழல் இருக்கும் போது அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்காமல் மோடி ஓடி ஒழிகிறார்.

மக்களவைத் தேர்தலில் மத்தியில் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். 2ஜி வழக்கில் நான் நிரபராதி என்று நிரூபித்ததைப் போல, ரபேல் விவகாரத்தில் மோடியும் நிரபராதி என்று நிருபிக்க வேண்டும். மேலும், நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை பாதுகாக்கவும், எச்.பி.எப். தொழிற்சாலையை நவீன மருத்துவமனையாக மாற்றவும் தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும், என அவர் கேட்டுக் கொண்டார்.

இதேபோல, கோத்தகிரி மற்றும் குன்னூரில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார். 



அப்போது, அவர் பேசியதாவது :- தேர்தலின் போதுதான் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமாக மதிப்பு அளிக்கப்படுகிறது. எனவே, அனைவரும் வாக்களிக்க வர வேண்டும். மேலும், ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற மக்களவையில் நரேந்திர மோடி மொத்தம் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களாட்சிக்குப் பதிலாக அதிபர் ஆட்சி தான் இந்தியாவில் நடைபெறும். 



ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று கூறிய மோடி, தனிநபர் கணக்கில் வரவு வைக்காவிட்டாலும், பரவாயில்லை அரசு கஜானாவிற்காவது கொண்டு வந்திருக்கலாம். வீராப்பாக பேசுவது மட்டுமே பா.ஜ.க.வின் பணி. செயல்களில் ஒன்றும் இருக்காது, 

எனவே, வேற்றுமையில் ஒற்றுமையுடன் இருக்கும் இந்தியாவில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். நீலகிரியில் போட்டியிடும் ஆ. ராசாவை பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...