தேர்தல் முடிவு வரும்போது தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும் : சீதாராம் யெச்சூரி பேச்சு

திருப்பூர்: தேர்தல் முடிவு வரும்போது தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும் என்றும், மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும் நேரத்தில், தமிழக இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்படும் என திருப்பூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.


திருப்பூர்: தேர்தல் முடிவு வரும்போது தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும் என்றும், மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும் நேரத்தில், தமிழக இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்படும் என திருப்பூரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து கொங்கு மெயின்ரோட்டில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி அமைய பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள் என மோடி கேட்கிறார். ஆனால், கடந்த 5 ஆண்டுகால நிலையான ஆட்சி இருந்தபோது, மோடி அவர்கள் என்ன செய்தார். கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மேலும், இந்தியாவின் காவலாளி என்ற மோடி, விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் சாதனையை தனதாக்கிக்கொண்டு விண்வெளியின் காவலாளி என்றார், பிறகு இந்த பிரபஞ்சத்தின் காவலாளி என்றார். அவர் வெளிநாட்டிற்கு மற்ற கிரகத்திற்குமேயானாலும் காவலாளியாக இருந்துவிடட்டும், அப்போதுதான் இந்தியா பாதுகாக்கப்படும்.



கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பசு காவலர்கள் என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது அதிகளவு தாக்குதல் நடைபெற்றது. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்களும், கொலைக்குற்றங்களும் அதிகரித்ததே தவிர, அவர்களுக்கான தண்டனையை இந்த அரசு வழங்கவிலை. மேலும், மே23 தேர்தல் முடிவு வரும்போது, தமிழக மக்களுக்கு இரட்டை சந்தோசமாக இருக்கும். மத்தியில் மோடி ஆட்சி அகற்றப்படும். அதே நேரம் தமிழக இடைத்தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சியும் அகற்றப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும், என பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...