நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடக்கம்

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தலும் இதனுடன் சேர்த்து நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, ஆந்திரா (25), தெலங்கானா (17), அருணாச்சலப்பிரதேசம் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), சிக்கிம் (1), அசாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரா (7), மணிப்பூர் (1), ஒடிசா (4), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) மற்றும் மேற்கு வங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1) ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

மேலும், ஆந்திரா (175), அருணாச்சலப் பிரதேசம் (60), சிக்கிம் (32) ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவப்படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...