பெரியநாயக்கன் பாளையத்தில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் பதிவு முகாம்

கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் பதிவு முகாம் நடைபெற்றது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் பதிவு முகாம் நடைபெற்றது.



வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாஸ்போர்ட் பதிவு செய்யும் முகாம் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். 



கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் கலந்துகொண்டு, சுமார் 150 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பாஸ்போர்ட் பெற விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.

 

முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு அவரது வகுப்பிலேயே நேரடியாக சென்று விண்ணப்பம் பதிவு செய்ய பாஸ்போர்ட் அலுவலகத்தை சார்ந்த உமா உதவினார். இந்த முகாமின் நிறைவில் கல்லூரியின் மாணவர் நலன் முதன்மையர் கந்தப்பன் நன்றியுரை கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...