இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி அமைய வேண்டும் : திருப்பூரில் ஜி.கே. வாசன் பேச்சு

திருப்பூர் : இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மீண்டும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.


திருப்பூர் : இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மீண்டும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, தொண்டர்களிடம் அவர் பேசியதாவது :- மத்தியில் பா.ஜ.க., அரசு வென்ற பிறகு, மத்தியிலும், மாநிலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை சொல்லி ஏமாற்றியதே தவிர, நிறைவேற்றியதில்லை. அ.தி.மு.க. அரசு அதனை நிறைவேற்றித் தந்தது. இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்காகவே மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைய வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் சாமானியர்களுடன் பழக கூடியவர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசு ஒத்த கருத்துடன் இருந்தால்தான் திட்டங்கள் தங்குதடையின்றி கிடைக்கும். அ.தி.மு.க. கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி, தி.மு.க. கூட்டணி வெறுக்கும் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, என விமர்சித்துப் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...