கோவை : கோவை சக்தி சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கு படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கோவை : கோவை சக்தி சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 37 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கு படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கோவை - சத்தி சாலை ராமகிருஷ்ணாபுரம் அருகே சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், அவ்வழியாக வந்த காரில் சோதனை செய்தனர். அதில், தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரூ. 37 லட்சத்து 50 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
இந்த பணம் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்பப் பெறுமாறு அதிகாரிகள் அவர்களிடம் அறிவுறுத்தினர். இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.