நீலகிரி : பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் எம். ராமசாமி உறுதியளித்தார்.
நீலகிரி : பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகை நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மா முன்னேற்ற கழக வேட்பாளர் எம். ராமசாமி உறுதியளித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அம்மா முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் எம்.ராமசாமி உதகை நகரில் பரிசு பெட்டகத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் எம்.ராமசாமி, வாக்கு சேகரிக்க சென்ற ஒவ்வொரு தொகுதிகளிலும் பல பிரச்சணைகள் இருக்கிறது. உதகை தொகுதியில் பல ஆண்டுகளாக வாகன பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது. தான் வெற்றி பெற்றால் உதகை குதிரை பந்தய மைதானத்தில் பார்க்கிங் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு ரூ. 30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்தவன் என்பதால், இங்குள்ள பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார்.