பி.எம்.நரேந்திர மோடி படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. இதில், மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர், இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி டெல்லி, மும்பை உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் வழங்காததால், படத்தை வெளியிடுவது குறித்து நீதிபதிகள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் உடனடியாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை தெரிவிக்கும்படி கூறியுள்ளது. தணிக்கை வாரியம் அளிக்கும் தகவலின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான ஏப்ரல் 11ம் தேதி (நாளை) படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், பி.எம்.நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை பார்த்து ஆராய தேர்தல் ஆணையம் தரப்பில் குழு அமைக்க முடிவாகி உள்ளது. குழு பார்த்து ஒப்புதல் அளித்த பிறகு படம் வெளியிடப்படும். அரசியல் தலைவரை தொடர்புபடுத்தும் தனிநபரின் நோக்கம் எதுவும் மின்னணு ஊடகங்களில் காட்டப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...