கோவை : கோவை பந்தய சாலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விதியை மீறி அனுமதியின்றி நோட்டிஸ் விநியோகம் செய்ததாக மூன்று இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணையில் விடுவித்தனர்.
கோவை : கோவை பந்தய சாலை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விதியை மீறி அனுமதியின்றி நோட்டிஸ் விநியோகம் செய்ததாக மூன்று இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணையில் விடுவித்தனர்.
கோவை பந்தய சாலை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த மூன்று பேர் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக துண்டு பிரச்சாரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வந்தனர்.

இந்த நிலையில், ரோந்து பணியில் இருந்த பந்தய சாலை போலீசார் அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகம் செய்ததாக பீளமேடு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (24), புளியகுளம் பகுதியைச் சேர்ந்த கதிரொளி (25), துடியலூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அனுமதியின்றி கூடியது, அனுமதியின்றி நோட்டீஸ் வழங்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.