கோவை : கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தியதுடன், ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை : கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தியதுடன், ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆத்துப்பாலம் பகுதியில் கூடினர். பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், கண்டெய்னரில் டீத்தூள் மட்டுமே மூட்டை மூட்டையாக இருந்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக, சம்பந்தப்பட்ட தேயிலை நிர்வாகத்திற்கு ரூ. 45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் முகமது சாஜீத் தாக்கியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக, குனியமுத்தூர் போலீசில் ஓட்டுநர் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, முகமது சாஜீத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கண்டெய்னர் லாரியை சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர் முகமது சாஜித் மற்றும் ஃபிரோஸ்கான் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தற்போது மேலும் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சி.ஐ.டி.யு. மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.