ரபேல் வழக்கில் மத்திய அரசின் ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

ரபேல் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு வழக்கில் மத்திய அரசின் ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.


ரபேல் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டு வழக்கில் மத்திய அரசின் ஆட்சேபங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்பட்டதாக புகார் கூறி வருகின்றனர். காங்கிரஸ் ஒப்பந்தம் செய்த விலையை விட, அதிக விலைக்கு பாஜக குறைவான ரபேல் விமானங்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட 9% பதிலாக பாஜக ஆட்சியில் 2.86% விலையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 126 விமானங்களுக்கு பதில் 36 விமானங்கள் உடனடியாக வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிற்கு 17.08% தொகை மீதமாகி உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிரபல ஆங்கில நாளேடு பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டது. இதுகுறித்த வழக்கில் ரபேல் ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடமுடியாது என தீர்ப்பளிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஜோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

அதில், ரபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும். மேலும், ரபேல் விவகாரத்தில் இந்து நாளிதழில் வெளியான ஆவணங்களை பரிசீலிக்கப்படும். திருடப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.புதிய ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ரபேல் வழக்கில் அரசின் ஆட்சேபங்கள் நிராகரிக்கப்படுகிறது, என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...