கண்டெய்னர் லாரி விவகாரம் : சமூகவலைதளத்தில் வதந்தியான தகவலை பரப்பிய ‘கோவை தளபதி’ என்பவர் மீது வழக்குப்பதிவு

கோவை : கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய கோவை தளபதி’ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை : கோவையில் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய கோவை தளபதி’ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நேற்று கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆத்துப்பாலம் பகுதியில் கூடினர். பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கண்டெய்னரில் டீத்தூள் மட்டுமே மூட்டை மூட்டையாக இருந்தது. இந்த நடவடிக்கையின் காரணமாக, சம்பந்தப்பட்ட தேயிலை நிர்வாகத்திற்கு ரூ. 45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பிரகாஷை தாக்கியதாக 

மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் முகமது சாஜீத் 23-ம் தேதி வரை சிறையிலடைக்கப்பட்டார்.

கடந்த 9-ம் தேதி காலை கோவை தளபதி என்ற பெயரில் இணையதளத்தில் #BIGBREAKING கோவையில் சிக்கியது எஸ்.பி.வேலுமணியின் கண்டெய்னர் பணம்..!, மடக்கிப்பிடித்த பொதுமக்கள் மீது தடியடி நடத்தும் எடப்பாடியின் ஏவல்துறை..!, ஓட்டுக்கு பணம் கொடிக்கு இரவோடு இரவாக கண்டெய்னரில் கடத்தியது அம்பலம், என்ற பொய் செய்தி பதிவிடப்பட்டிருந்தது.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் காரணங்களுக்காக பொய் பிரச்சாரம் செய்வதால், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், இரு அமைப்புகளுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக, இந்த வதந்தியான செய்தியை பரப்பிய கோவை தளபதி’ என்பவர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...