நீலகிரி : தற்போது நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தி போன்றது என உதகையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.
நீலகிரி : தற்போது நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தி போன்றது என உதகையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பழ.கருப்பையா விமர்சித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து நேற்று உதகை சுதந்திர திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பழ.கருப்பையா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது :- அ.தி.மு.க.வில் எந்த தலைவர்களும் இறந்தாலும் அதை மறைப்பதே அ.தி.மு.க.வின் நிலைதான். ஆளும் கட்சிக்கு தற்போது நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் தொங்கும் கத்தி போன்றது.
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பிரதமர் மோடியின் தயவால் தான் நடைபெற்று வருகிறது. அத்திக்கடவு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய் இல்லாததால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆனால், பொங்கலுக்கு பரிசு வழங்குவதற்கு 2,000 கோடி ரூபாய் செலவு செய்த இந்த அரசு, ஏன் அத்திக் கடவு திட்டத்தை மேற்கொள்ளவில்லை.

ஜெயலலிதா வாங்கி வைத்த கடன் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு 19 சதவீதம் வட்டி கட்டி விட்டு மீதமுள்ள 6 சதவீதம் பணத்தை வைத்து தான் அரசை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருகிறார். வீராணம் ஏரி ஆயிரம் ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பயன் கொடுத்து வரும் நிலையில், அதை கட்டிய சோழன் அரசின் ஆட்சி, ஆனால் தற்போதைய நடைபெறும் ஆட்சியா..?
8 வழிச்சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம், ஆனால், அத்திக் கடவு திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாய் இல்லை. விவசாய நிலங்களை ஆக்கிரமித்தும் 8 வழிச்சாலைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது.
காஷ்மீரில் தீவிரவாதிகளால் 40 ராணுவ வீரர்கள் பலியான நிலையில், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து பணம் கொடுத்தும் தயார்ப்படுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி விமானப் படை மூலம் தீவிரவாதிகள் இடத்தில் குண்டுகள் வீசப்பட்டு 350 பேரை கொன்றதாக பெருமைப்பட்டு, 2 நாட்களிலேயே வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்று இந்தியா வீசிய குண்டில் அந்த இடத்தில் குழியானது தவிர தீவிரவாதிகள் யாரும் இறக்கவில்லை என்று எழுதியது. பிரதமர் மோடிக்கு இது கேவலமாக இல்லையா.
பிரதமர் மோடி ரேடியோ அலைவரிசையில் பேசுவார் என்றதும், பணம் செல்லாது என்று கூறி விடுவாரோ என்று மக்கள் அனைவரும் வங்கி கணக்கில் உள்ள தங்களது சேமிப்பு பணங்களை எடுக்க செல்லும் நிலைதான் நிலவுகிறது, என்றார்.