'மருதமலை முருகனுக்கு அரோகரா' என தமிழில் கூறி கோவையில் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி

கோவை : அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, 'மருதமலை முருகனுக்கு அரோகரா' எனக் கூறி பிரச்சாரத்தை தொடங்கினார்.


கோவை : அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, 'மருதமலை முருகனுக்கு அரோகரா' எனக் கூறி பிரச்சாரத்தை தொடங்கினார். 

கோவை பா.ஜ.க.,வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகேந்திரன் (பொள்ளாச்சி), ஆனந்தன் (திருப்பூர்), தியாகராஜன் (நீலகிரி), ஆகியோரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். 



தொடர்ந்து, கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் உரையைத் தொடர்ந்த அவர், 'மருதமலை முருகனுக்கு அரோகரா' எனக் கூறினார். தொடர்ந்து, அவர் பேசியதாவது :- கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன். உலகின் மிக பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி. தமிழ் பண்பாடு உலகம் முழுவதும் பிரசித்து பெற்றது. ஓரிரு நாட்களில் தமிழ் புத்தாண்டு கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள். 

ராணுவ தளவாட தொழிற்சாலைகள் அமைய உள்ள மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு. நாட்டின் பாதுகாப்பு தளவாட தேவைகளில் தற்சார்பு பெற புதிய தொழிற்சாலைகள் உதவும். பா.ஜ.க. அரசின் தேசியவாதம் தான் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வங்கிக்கணக்கை உறுதி செய்தது. ஜவுளி உற்பத்தி தொழில்களின் பிரச்சனைகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது, அதை சரி செய்வோம். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளது. ஏழைகளுக்கு சேவை செய்யும் தங்களின் நோக்கத்துக்கும், பதவியைப் பிடிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நோக்கத்துக்கும் தான் மோதல் நடக்கிறது.



பாதுகாப்பு பிரச்சனையைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகளிடம் எந்த கொள்கைகளும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது, நாடு பலமுறை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உள்ளானது. 1998 பிப்ரவரியில் இதே கோவை நகரத்தில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தினர். இன்று இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், வட்டியுடன் திருப்பி கொடுக்கப்படுகிறது. தீவிரவாதிகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் உள்ளதா..? என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. எதிர்க்கட்சிகள் உங்களை கூட பாதுகாக்காது, எனக் கூறினார். 

பிரதமர் மோடியின் கோவை வருகையையடுத்து 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...