மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிப்படையும் : கோவை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு

கோவை : மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிப்படையும் என கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


கோவை : மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால் தமிழகம் செழிப்படையும் என கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

கோவை பா.ஜ.க.,வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகேந்திரன் (பொள்ளாச்சி), ஆனந்தன் (திருப்பூர்), தியாகராஜன் (நீலகிரி), ஆகியோரை ஆதரித்து கோவை கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். 



இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர். மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். ஆனால், எதிர்க்கட்சியினர் இன்னும் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலின் மட்டுமே ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக வழிமொழிந்து வருகிறார். ஆனால், எதிர்கட்சிகளின் கூட்டணியில் ஒருமித்த கருத்து என்பது இல்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், தற்போது பிரதமர் வேட்பாளராக மோடி மட்டுமே இருக்கிறார். நாங்கள் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் உறுதியாக வெற்றி பெறுவோம். 



விவசாயிகளுக்கான மானியம், விவசாயிகளுக்கு முதுகெலும்பாக இருக்கக் கூடிய கோதாவரி - காவேரி நதிகள் இணைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பா.ஜ.க., அறிவித்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை கோவையில் கொண்டு வந்து, வேலைவாய்ப்பு அதிகரிப்பிற்கு பா.ஜ.க.வே முக்கியக் காரணம். தகுதியான பிரதமர் மோடியின் தலைமையில் ஆட்சி அமைந்தால், தமிழகம் செழிப்படையும், என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...