கோவை : தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கோவை : தேசிய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகம் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், உலக அளவுக்கு தரமான கல்வி நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்துடனும், தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. இதற்கென தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன தரவரிசை (என்.ஐ.ஆர்.எஃப்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். அதில், தேசிய அளவில் கோவையைச் சேர்ந்த அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகம் 8-வது இடத்தை பிடித்துள்ளது. மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
"அமிர்தா விஷ்வா வித்யபீதம் மீண்டும் முதன்மையான 10 கல்லூரிகளின் பட்டியலுக்குள் இடம் பிடித்துள்ளது. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு இந்தப் பெருமையைப் பெற்றுத் தந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அமிர்தா விஷ்வா வித்யபீதம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி. வெங்கட் ரங்கன்.