நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்கம்பி உரசியதில் வீட்டின் மேல் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்கம்பி உரசியதில் வீட்டின் மேல் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர் அருகே உள்ள ஒதனட்டி கிராமத்தை சோ்ந்தவர்கள் சசிகுமார், வைதேகி தம்பதியினர். இவர்களுக்கு பிரவீன் (14), நவீன் (8) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பிரவீன் அருவங்காடு பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.

நவீன் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், பிரவீன் தங்களது வீட்டின் மேற்புறம் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் அருகே உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. வீட்டின் மேற்புறம் மின் கம்பி இருந்தை அறியாமல், சிறுவனின் கழுத்து மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக உரசியது. இதனால், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான்.

ஆனால், வீட்டின் அருகே யாரும் இல்லாததால் சுமார் ஒரு மணிநேரம் பிரவீன் மின்கம்பியில் தொங்கியபடி இருந்துள்ளான். அப்போது, அவ்வழியாக வந்த கிராம மக்கள் உடனடியாக மின்சார வாரியத்திற்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்களும், போலீசாரும் மின் இணைப்பை துண்டித்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்கம்பி தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.