கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.,- பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பாதுகாப்பு கருதி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், நிகழ்ச்சி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வந்து அமர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

இதனால், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் என சில எதிர்பாராதவிதமாக கருப்பு ஆடை அணிந்து வந்தவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கருப்பு ஆடையைத் தவிர்த்து பிற வண்ண ஆடைகளை அணிந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி பாஸ் இருந்தும் சிம்ப்ளிசிட்டியைச் சேர்ந்த செய்தியாளர் கருப்பு டீ-சர்ட் அணிந்து வந்ததால் அனுமதிக்கவில்லை. 

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்க வருபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், கருப்பு நிற ஆடையை அணிந்தவர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...