சூலூர் உள்பட காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர் உள்பட மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர் உள்பட மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

17-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, முதற்கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

• ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்

• ஏப்ரல் 30 வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

• மே 2 வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம்

• மே 19ல் வாக்குப் பதிவு

• மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...