கோவை : கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 90.5 சவரன் நகைகளையும், திருடர்களையும் கோவை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
கோவை : கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட 90.5 சவரன் நகைகளையும், திருடர்களையும் கோவை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
கடந்த 3-ம் தேதி ஜி.என். மில்ஸ் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி, பீரோவில் இருந்த 33.5 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதேபோல, 7-ம் தேதி கவுண்டம்பாளையம், டிவிஎஸ் ரோடு பகுதியில் ஷிபா என்பவர் மளிகைக் கடைக்கு சென்று விட்டு திரும்பி வருகையில், மத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர். பல்வேறு ஆதாரங்களை வைத்து தேடியதில், கடந்த 7-ம் தேதி உருமாண்டம்பாளையம் ரயில்வே கேட் அருகே பாலமுருகன், விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்தொடர்ச்சியாக, 8-ம் தேதி அண்ணாநகர் சோதனை சாவடியில், தங்கராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது துடியலூர், ஒத்தக்கடை மற்றும் அபிராமபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட கொடூரமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்து, களவு சொத்தான 90.5 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ள கோவை மாவட்ட போலீசாரை பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.