சென்னை : யாருக்கும் ஆதரவில்லை என்ற தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை : யாருக்கும் ஆதரவில்லை என்ற தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அரசியல் பிரவேசத்தை உறுதி செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உரிய நேரத்தில் கட்சியின் பெயரை வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார். ஆனால், இவருக்குப் பின் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சக நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி, நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்கிவிட்டார்.
இந்த நிலையில், போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- மக்களவை தேர்தலில் எனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். கமலுக்கும், தனக்கும் இடையிலான நட்பை சீர்குலைத்துவிட வேண்டாம். தனது அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைத்துவிட்டாலே நாட்டில் பாதி வறுமை ஒழியும். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதலில் நதிகளை இணைக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.