கோவை : ஆத்துப்பாலம் அருகே சிறைபிடிக்கப்பட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர் லாரியில் உள்ள மூட்டைகள் இறக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் நேற்று இரவு 10.30 மணி அளவில் கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக சென்றுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக அதை விரட்டி பிடித்தனர். அப்போது, லாரி ஓட்டுநர் பிரகாஷ் முன்னுக்குப்பின் முரணாக பேசிய நிலையில், கண்டெய்னர் லாரியில் கட்டுகட்டாக பணம் இருப்பதாக தகவல் பரவியது.
கண்டெய்னர் லாரி நிறைய பணம் பிடிபட்டுள்ளது என்ற பரவிய தகவலால் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆத்துப்பாலம் பகுதியில் குவிந்தனர். இதனால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, கண்டெய்னர் லாரி தாராபுரத்தை சேர்ந்த என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
லாரியல் டீத்தூள் இருப்பதாக லாரி ஓட்டுனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை நம்ப மறுத்த பொதுமக்கள் கண்டெய்னர் லாரியை உடனடியாக திறந்து காட்ட வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, லாரியை பொதுமக்கள் முன்னிலையில் திறந்து காட்ட வேண்டும் எனவும், இல்லையெனில் லாரியை எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், பொதுமக்களை கலைந்து போகச் சொல்லி காவல்துறை தரப்பில் பலமுறை கேட்கப்பட்டது. ஆனால், கூட்டம் கலைந்து செல்லாத நிலையில், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர். இதைத் தொடர்ந்து, லாரியை சுற்றி நின்று கொண்டிருந்த பொதுமக்கள் ஆளுக்கு ஒருபுறமாக ஓட்டம் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை விட்டு கலைந்து செல்ல வேண்டும் எனவும், தாசில்தார் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாரியில் உள்ள பொருள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் சோதனைக்கு இடையூறு செய்யாமல் பொதுமக்கள் கலைந்து செல்ல வேண்டும் என மைக் மூலம் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து கண்டெய்னரில் இருந்த பூட்டானது உடைக்கப்பட்டது. ஆனால், முழுமையாக திறக்க முடியாததால் கண்டெய்னர் லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்ல காவல் துறையினர் முடிவு செய்தனர். பொது மக்களில் ஒரு சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்படி சொன்ன காவல்துறையினர் லாரியை ஆட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கண்டெய்னர் லாரி கோவை ஆட்சியர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டது. அதில், டீத்தூள்கள் மட்டுமே பண்டல் பண்டல்களாக இருப்பது தெரிய வந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்கு தி.மு.க. உட்பட அரசியல் கட்சியினரும் நேரில் வந்து பார்வையிட்டனர். கண்டெய்னர் முழுவதும் டீத்தூள் மட்டுமே வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. டீத்தூள் வெள்ளக்கிணறு பகுதியில் ஒரு ஆலையில் இருந்து பேக் செய்யப்பட்டு, கொச்சி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், ஆட்சியர் அலுவலகம் வந்த தி.மு.க.வினர், லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி சோதனையிட வேண்டும் எனவும், கண்டெய்னரில் முன் பகுதியில் உள்ள மூட்டைகளை மட்டும் சோதனையிடுவதில் உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட இந்த பகுதியில் பிடிபட்ட கண்டெய்னரில் இருக்கும் எல்லா மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்ய வேண்டும், காலையில் அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்த பின்னரே விடுவிக்க வேண்டும் என தி.மு.க.வினர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர் லாரியில் உள்ள மூட்டைகள் இறக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,துணை ஆட்சியர் (பயிற்சி)சினேகா, தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் ஆகியோர் இருந்தனர். கண்டெய்னரில் என்ன இருக்கிறது என்பதை காண பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்து உள்ளனர்.